கம்பராமாயணம் 7053 · யுத்த 13.38

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

நீரிலே பட்ட - தண்ணீரில் தோன்றியவர்களும்; சூழ்ந்த நெருப்பிலே பட்ட - வளைந்து எரிகின்ற நெருப்பிலே தோன்றிய உயிர்களும்; நீண்ட பாரிலே பட்ட - பரந்த பூமியில் தோன்றிய உயிர்களும்; வானப் பரப்பிலே பட்ட - ஆகாய வெளியிலே தோன்றிய உயிர்களும்; எல்லாம் - ஆகிய எல்லா உயிர்களும்; போரிலே பட்டு வீழ - போர்க்களத்திலே மடிந்து வீழுமாறு; பொருத நீ - போரிட்ட நீ; (இப்பொழுது) உன் ஊரிலே ஒளித்துப் புக்குப் பட்டாய் என்றால் - உன்னுடைய ஊராகிய இலங்கைக்குள் புகுந்து கொண்டு ஒளிந்திருக்கையில் மாண்டாய் என்று சொன்னால்; பழி - உனக்கு அது (பெரும்) பழியாய் முடியும்; என - என்று; உளையச் சொன்னான் - இராவணன் மனம் புண்ணாகுமாறு மொழிந்தான் (அங்கதன்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "All born in the water, all born in the encircling fire,
  2. all born on the wide earth, all born in the expanse of the sky,
  3. you fought until they fell slain in battle; if now, hiding,
  4. you die inside your own city, it will be disgrace," he said, to sting him.

What the poem says

Aṅkataṉ ends with a taunt meant to hurt. Irāvaṇaṉ has fought and killed beings of every kind, born in water, fire, earth and sky. If after all that he dies skulking inside his own city, people will remember only his disgrace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nīrilē paṭṭa, cūḻnta neruppilē paṭṭa, nīṇṭa
pārilē paṭṭa, vāṉap parappilē paṭṭa ellām,
pōrilē paṭṭu vīḻap poruta nī, oḷittup pukku uṉ
ūrilē paṭṭāy eṉṟāl, paḻi ‘ eṉa uḷaiyac coṉṉāṉ.