கம்பராமாயணம் 7055 · யுத்த 13.40

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏவினார் பிடித்தாரை - இவ்வாறு இராவணனால் ஏவப்பட்டவர்களாய்த் (தன்னைப்) பிடிக்க வந்த நால்வரையும்; எழ எடுத்து தாவினான் - அந்தரத்தில் தொங்குமாறு அவர்களைப் பற்றிக்கொண்டு உயரப் பாய்ந்து; அவர் தம் தலை போய் அற - அவர்கள் தலைகள் அற்று ஒழியச் செய்து; கூவினான் - முழக்கமிட்டு; அவன் கோபுர வாசலில் தூவினான் - (அவர்களுடலை) இராவணனுடைய அரண்மனைக் கோபுர வாசலில் சிதறிவிட்டு; துகைத்தான் - மிதித்தவனாய்; இவை சொல்லினான் - பின்வரும் சொற்களை மொழிந்தான்.

இப்பாடலில் வெகுளியின் மெய்ப்பாடுகள் சொல் வடிவம் பெற்றுள்ளன. ஏவினார். ஏவப்பட்டவர் செயப்படுபொருள் வினை. செய்வினை போல வந்தது. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற் படக்கிளத்தலும் வழக்கு இயல் மரபே. (தொல். சொல்: 6. 49).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The four who were sent seized him; lifting them, he leapt up
  2. so that their heads were torn off; he roared;
  3. at the gate of that one's tower he scattered them,
  4. trampled them underfoot, and spoke these words.

What the poem says

The four demons grab Aṅkataṉ. He leaps into the air holding them, rips their heads off, roars, flings their bodies down at the gate of Irāvaṇaṉ's palace tower and stamps on them. The verse's string of short, hard verbs conveys his fury.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēviṉār piṭittārai eṭuttu eḻat
tāviṉāṉ avartam talai pōy aṟak
kūviṉāṉ avaṉ kōpura vāyilil
tūviṉāṉ tukaittāṉ ivai colliṉāṉ.