கம்பராமாயணம் 7056 · யுத்த 13.41

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஏமம் சார எளியவர் யாவிரும்
தூமம் கால்வன வீரன் சுடுசரம்
வேம் மின் போல்வன வீழ்வதன் முன்னமே
போமின் போமின் புறத்து ‘என்று போயினான்.

பொருள் · Meaning in Tamil

தூமம் கால்வன - (பின்பு அங்கிருந்த வீரர்களை நோக்கி) புகை கக்குகின்றனவும்; வேம் மின் போல்வன - கொதிக்கின்ற மின்னல்களைப் போல்வனவும் ஆகிய; வீரன் சுடுசரம் - இராமபிரானுடைய சுட்டெரிக்கின்ற அம்புகள்; வீழ்வதன் முன்னமே - உங்கள் மீது வந்து வீழ்வதன் முன்னமே; எளியவர் யாவரும் - வலிமையற்ற நீங்கள் அனைவரும்; ஏமம் சார - பாதுகாப்பான இடங்களையடையும்படி, (இப்போதே); புறத்துப் போமின் போமின் - அப்பால் செல்லுங்கள்; செல்லுங்கள்; என்று போயினான் - என்று சொல்லியவாறே (இராமபிரான் இருக்குமிடம்) சென்றான் (அங்கதன்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "All you who are weak, to find safety,
  2. before the hero's burning arrows, breathing out smoke
  3. like searing lightning, come falling on you,
  4. go, go, get away outside!" he said, and went.

What the poem says

Before leaving, Aṅkataṉ warns the ordinary demons in the hall. Irāmaṉ's arrows will soon fall on them, smoking and scorching like lightning, so anyone who is weak should run for safety now. Then he goes back to Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ēmam cāra eḷiyavar yāvarum
tūmam kālvaṉa vīraṉ cuṭu caram
vēm miṉ pōlvaṉa vīḻvataṉ muṉṉamē
pōmiṉ pōmiṉ puṟattu ‘eṉṟu pōyiṉāṉ.