கம்பராமாயணம் 7057 · யுத்த 13.42

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான் அவர்
சிந்து அரத்தம் துதைந்து எழும் செச்சையான்
இந்து விண் நின்று இழிந்து உளதாம் என
வந்து வீரன் அடியின் வணங்கினான்.

பொருள் · Meaning in Tamil

சிந்து ரத்தம் - சிந்திய உதிரத்தினால்; துதைந்து எழும் செச்சையான் - நெருங்கித் தோன்றிய செஞ்சந்தனம் போன்ற பூச்சுக்களையுடைய அங்கதன்; அந்தரத்திடை - ஆகாயத்தினில்; ஆர்த்தெழுந்தான் - ஆர்ப்பரித்தவாறு எழுந்தானாகி; விண்ணின்று - ஆகாயத்திலிருந்து; இந்து இழிந்துளது ஆம் என - சந்திரன் (பூமியில்) இறங்கியது என்று (கண்டோர் கருதுமாறு); வந்து வீரன் அடியில் வணங்கினான் - வந்து இராமபிரானின் திருவடிகளை வணங்கி நின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He rose roaring into the sky, smeared with
  2. the blood they had spilled, clinging close like red sandal paste;
  3. and as though the moon had come down from the heavens,
  4. he came and bowed at the hero's feet.

What the poem says

Aṅkataṉ soars up roaring, his body splashed with the demons' blood as if with red sandal paste. As he comes down to bow at Irāmaṉ's feet he looks like the moon descending from the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antarattiṭai ārttu eḻuntāṉ avar
cintu arattam tutaintu eḻum ceccaiyāṉ
intu viṇniṉṟu iḻintuḷatām eṉa
vantu vīraṉ aṭiyil vaṇaṅkiṉāṉ.