கம்பராமாயணம் 7059 · யுத்த 14.1

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ”
பாட வேறுபாடு · Project Madurai reads
1“பூசலே; பிறிது இல்லை ” எனப் புறத்து
ஆசை தோறும் முரசம் அறைந்து என
பாசறைப் பறையின் இடம் பற்றிய
வாசல் தோறும் முறையின் வகுத்திரால்.

பொருள் · Meaning in Tamil

பூசலே பிறிதில்லை - இனிமேல் போரேயன்றிச் சமாதானம் என்பது இல்லை; என - என்று; புறத்து - வெளியில்; ஆசை தோறும் - திசைகள் தோறும்; முரசம் அறையுமின் - முரசறையுங்கள்; பாசறைப் படையின் இடம் - பாசறையில் உள்ள சேனை வீரர்களிடம்; பற்றிய வாசல் தோறும் - தாம்தாம் பொருந்தியுள்ள கோட்டை வாயில்கள் தோறும்; முறையின் வகுத்திர் - முறைப்படி அணிவகுத்து நிற்பீராக (என்று ஆணையிட்டான் இராமபிரான்). பூசலே - ஏகாரம். தேற்றப் பொருளில் வந்தது. பிரிநிலையுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'It is battle now; there is nothing else': proclaim it, and outside,
  2. beat the war drums in every quarter;
  3. and the troops in the camp, at every gate they hold,
  4. draw them up in proper order."

What the poem says

A new chapter begins: the First Battle. With the embassy rejected, Irāmaṉ gives his orders. Drums are to sound in every direction announcing that there will be nothing now but war, and the troops at each gate are to form up in order of battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“pūcalē; piṟitu illai ” eṉa, puṟattu
ācaitōṟum muracam aṟaintu eṉa
pācaṟaip paṭaiyiṉṉiṭam paṟṟiya
vācaltōṟum muṟaiyiṉ vakuttirāl.