கம்பராமாயணம் 7060 · யுத்த 14.2

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மற்றும் நின்ற மலையும் மரங்களும்
பற்றி வீசிப் பரவையின் மும்முறை
கற்ற கைகளினால் கடி மாநகர்
சுற்றி நின்ற அகழியைத் தூர்த்திரால்.

பொருள் · Meaning in Tamil

மற்றும் - மேலும்; கற்ற கைகளினால் - முன்பே கடலைத் தூர்த்துப் பழகிய கைகளினால்; வீரர் - வீரர்கள்; நின்ற மலையும் மரங்களும் - ஆங்காங்கு நின்றுள்ள மலைகளையும் மரங்களையும்; பற்றி - கரங்களால் பிடித்து; பரவையின் - (சேது அணையிட்ட போது) கடலில் இட்டதினும்; மும்முறை - மூன்று மடங்கு மிகுதியாகக் கொணர்ந்து (வீசி); கடிமாநகர் சுற்றும் நின்ற - காவல் அமைந்த பெரிய இலங்கை நகரைச் சுற்றிச் சூழ்ந்துள்ள; அகழியைத் தூர்த்திர் - அகழியைத் தூர்த்திடுங்கள் (எனக் கட்டளையிட்டான் இராமன்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "And the mountains and the trees that stand about,
  2. seize them, heroes, three times over what you threw into the sea,
  3. and with your practised hands, the moat round the guarded great city,
  4. the moat that encircles it, fill it in."

What the poem says

Next the monkeys are to fill in the moat around Ilaṅkai. They already have the practice, having filled the sea to build the causeway. Now they are to tear up hills and trees and throw in three times as much as they did then.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟum niṉṟa malaiyum maraṅkaḷum
paṟṟi vīrar! paravaiyiṉ mum muṟai
kaṟṟa kaikaḷiṉāl kaṭi mā nakar
cuṟṟum niṉṟa akaḻiyait tūrttirāl.