கம்பராமாயணம் 7061 · யுத்த 14.3

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
”
பாட வேறுபாடு · Project Madurai reads
1இடுமின் பல மரம்; எங்கும் இயக்கு அறத்
தடுமின்; “போர்க்கு வருக! ” எனச் சாற்றுமின்;
கடுமின் இப்பொழுதே கதிர்மீச் செலாக்
கொடுமதில் குடுமித் தலைக் கொள்கென்றான்.

பொருள் · Meaning in Tamil

(எங்கும்) பன்மரம் இடுமின் - (தெருக்கள்) எங்கும் மரங்கள் பலவற்றைப் போடுங்கள்; எங்கும் இயக்கறத்தடுமின் - (அவ்வாறு இட்டு) அரக்கர்கள் எங்கும் நடமாட இயலாதபடி தடுத்துவிடுங்கள்; போர்க்கு வருக எனச் சாற்றுமின் - யுத்தத்திற்கு வாருங்கள் எனக் கூவியழையுங்கள்; கடுமின் - விரைவோடு; இப்பொழுதே - இப்போதே; கதிர் மீச் செலா - சூரியனும் (நேராகச்) செல்ல இயலாத; கொடுமதில் குடுமித் தலைக்கொள்க - வளைந்து செல்லும் மதில்களின் சிகரத்தைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள்; என்றான்.

இராமன் - தோன்றா எழுவாய். எங்கும் என்பது இடைநிலைத் தீபமாய் நின்று முன்னும் இணைந்து பொருள் தர நின்றது. மதில் குடுமியைக் கைக்கொள்ளுதல் என்பது அம்மதிலின் உச்சியில் ஏறி நிலைகொள்ளுதல். இதனை, "குடுமி கொண்ட மண்ணு மங்கலம்" (தொல். புறத். 68) எனத் தொல்காப்பியம் புகலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Throw down many trees, so that all movement everywhere
  2. is blocked; cry out, 'Come out to battle!';
  3. and quickly, this very moment, the bannered wall that
  4. the sun cannot pass over, seize its crest," he said.

What the poem says

Irāmaṉ's orders continue. The monkeys are to block every way in and out with fallen trees so that the demons cannot move, shout challenges for them to come out and fight, and storm the walls at once to take the top of the ramparts, which are so high that even the sun cannot pass straight over them.

Taking the crest of an enemy's wall is a recognised stage of siege warfare in classical Tamil poetics.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭumiṉ pal maram; eṅkum iyakku aṟat
taṭumiṉ; “pōrkku varuka! ” eṉac cāṟṟumiṉ;
kaṭumiṉ ippoḻutē katir mīccelāk
koṭi matil kuṭumittalaikkoḷka eṉṟāṉ.