கம்பராமாயணம் 7064 · யுத்த 14.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விளையும் வென்றி - இதுகாறும் வெற்றியினையே விளைவித்துக் கொண்டிருந்த; இராவணன் மெய்ப்புகழ் - இராவணனது உண்மையான புகழை; முளையினோடும் களைந்து முடிப்பபோல் - அடியோடு பறித்து முடிப்பவை போலத்; தளை அவிழ்ந்த - கட்டு அவிழ்ந்த; கொழுந்தடந்தாமரை - வளமான தாமரைக் கொடிகளின்; வளையம் - தண்டின் அடிப்பகுதிகளை; வானரம் வன்கையில் வாங்கின - குரங்குகள் தம் வலிய கைகளால் பற்றி எடுத்தன.
இலங்கை மூதூரின் அகழியில் குரங்குகள் தாமரைக் கிழங்குகளை தோண்டியுண்ட செயல், இராவணன் புகழின் வீழ்ச்சிக்குத் தொடக்கமாதல் அறிக. தற்குறிப்பேற்ற அணி. தாமரை வளையம் - தாமரைக் கிழங்கு. வட்டமாக இருப்பதுபற்றி கிழங்கு வளையம் எனப்பட்டது. இறுதியடி - முற்று மோனை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if to root out and finish off, sprout and all,
- the true fame of Irāvaṇaṉ, which had always yielded victory,
- the monkeys took up in their strong hands the round roots
- of the rich, broad lotuses whose buds had burst open.
What the poem says
As they fill the moat, the monkeys pull up the round roots of the lotuses growing in it. The poet gives the act an imagined meaning: they are pulling up Irāvaṇaṉ's long record of victories by the roots. The fall of his fame starts here, in his own moat.