கம்பராமாயணம் 7068 · யுத்த 14.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1தூறும் மாமரமும் மலையும் தொடர்
நீறும் நீர்மிசைச் சென்று நெருக்கலால்
ஏறு பேர் அகழின் நின்று இனப் பல
ஆறு சென்றன ஆர்கலி மேல் அரோ.
பொருள் · Meaning in Tamil
தூறு மாமரம் - தூறுகள் போல் அடர்ந்த பெரிய மரங்களும்; குன்றினோடும் தொடர் நீறும் - மலைகளுடன் தொடர்ந்து எடுத்த புழுதியும்; நீர் மிசைச் சென்று நெருக்கலான் - (அகழி) நீர் மேலே சென்று நெருக்குவதால்; ஏறு பேர் அகழ் நின்று - நீர் மேலே பொங்கிய பெரிய அகழியிலிருந்து; எனைப்பல - எத்தனையோ பல; ஆறு - ஆறுகள்; ஆர்கலி மீது சென்றன - கடலை நோக்கிப் பாய்ந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the thick, bushy great trees and the hills, and the dust that came with them,
- fell on the water and pressed down upon it,
- out of the great moat as its waters rose, many and many
- a river ran away into the sea.
What the poem says
So many trees, hills and so much dust are piled into the moat that its water is forced up and out. It overflows in so many streams that they run like rivers down into the sea.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūṟu mā maramum malaiyum toṭar
nīṟu, nīrmicaic ceṉṟu nerukkalāṉ
ēṟu pēr akaḻniṉṟum eṉaip pala
āṟu ceṉṟaṉa ārkalimītuarō.