கம்பராமாயணம் 7069 · யுத்த 14.11

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இழுகு மாக் கல் இடுந்தொறும் இடுந்தொறும்
சுழிகள் தோன்றும் சுரித்து; இடை தோன்று தேன்
ஒழுகு தாமரை ஒத்தன ஓங்கு நீர்
முழுகி மீது எழும் மாதர் முகத்தையே.

பொருள் · Meaning in Tamil

இழுகு மாக்கல் - (அகழியைத் தூர்ப்பதற்காக வானரங்கள்) வீசுகின்ற பெரிய கற்கள்; இடும் தொறும் இடும்தொறும் - (வீசி) எறியும்தோறும்; சுழிகள் தோறும் - (அப்போது நீரிடையே தோன்றுகின்ற) நீர்ச்சுழிகளின் நடுவிடந்தோறும்; சுரித்து - அழுந்திப் (பின்); இடைதோன்று - அவ்விடத்தே வெளிப்படுகின்ற; தேன் ஒழுகு தாமரை - தேன் ஒழுகப் பெற்ற தாமரை மலர்கள்; ஓங்குநீர் முழுகி - அலைகள் எழுகின்ற நீரிலே முழுகி; மீது எழு மாதர் முகத்தை ஒத்தன - மேலே எழுகின்ற பெண்களின் முகத்தை ஒத்திருந்தன.

அகழியில் எழுந்த அலைகளின் அலைக்கழிப்பால், தாமரை மலர்கள் நீருக்குள் மூழ்கி, மீண்டும் எழுவது குளித்து எழும் மாதர் முகங்களைப் போன்றன என அழகுறக் கற்பித்தார். "பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல், இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும், கய மூழ்குமகளிர் கண்ணின் மானும்" (குறுந். 9) எனும் குறுந்தொகைப்பாடல் இங்கு ஒப்பு நோக்க உரியதாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Each time the great stones were flung in, each time,
  2. sinking down in every whirlpool and then showing again between, the honey-
  3. dripping lotuses looked, as they plunged into the swelling water,
  4. like the faces of women who dive and come up to the surface.

What the poem says

Every rock thrown into the moat makes a whirlpool that pulls the lotuses under, and then they bob back up. The poet compares them to the faces of women bathing, who duck under the water and come up again. A poem in the Kuṟuntokai uses a similar image, comparing water lilies rising with the tide to the eyes of women diving in a pool.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḻuku māk kal iṭumtoṟu iṭumtoṟum
cuḻikaḷtōṟum curittu; iṭai tōṉṟu tēṉ
oḻuku tāmarai ottaṉa ōṅku nīr
muḻuki mītu eḻu mātar mukattaiyē.