கம்பராமாயணம் 7070 · யுத்த 14.12

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தன்மைக்குத் தலையாய தசமுகன் - தான் எனும் ஆணவப் பண்பிற்குத் தலைவனான பத்துத் தலைகளையுடைய இராவணனின்; தொன்மைப் பேரஅகழ் - பழமை வாய்ந்த பெரிய (இலங்கை) அகழியையும்; வானரம் தூர்த்தது - குரங்குகள் தூர்த்து (நிரப்பி) விட்டன; (என்றால்) யாவர்க்கும் - எத்தகையோர்க்கும்; ஒன்று இன்மைக்கும் உடைமைக்கும் - ஒன்றும் இல்லாமையாகிய வறுமைக்கும் எல்லாம் உடைமையாகிய செல்வத்திற்கும்; வன்மைக்கும் - வல்லமைக்கும்; ஓர் வரம்பும் உண்டாம் கொல்? - ஒரு எல்லைகட்ட இயலுமோ?

உயிரின் ஆதிப் பண்பு, தான் என்பது ஆதலின், ஆணவம் தன்மை எனப்பட்டது. "இங்கு ஆர் எனக்கு நிகர் எனப் பிரதாபித்து இராவணாகாரமாகி" (தாயு. மௌனகுரு. 9) என்று சான்றோர்கள் கூறுமாறு இராவணன் அகங்காரம் பெயர்பெற்ற ஒன்று ஆதலின், "தன்மைக்குத் தலையாய தசமுகன்" என்றார். இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பணியாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The ancient, great moat of the Ten-Faced one, chief of all self-regard,
  2. the monkeys have filled in; so, then,
  3. for lacking and for having, for anyone at all,
  4. and for strength, can there be any fixed limit?

What the poem says

The monkeys have filled the ancient moat of Irāvaṇaṉ, the very embodiment of ego; his arrogance was proverbial. The poet draws a general lesson: no one's poverty, wealth or strength is fixed for ever, and fortunes can turn completely.

Stating a general truth to round off a particular event is a recognised figure of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉmaikkut talaiyāya tacamukaṉ
toṉmaip pēr akaḻ vāṉaram tūrttatāl;
iṉmaikkum oṉṟu uṭaimaikkum yāvarkkum
vaṉmaikkum ōr varampum uṇṭāmkolō?