கம்பராமாயணம் 7071 · யுத்த 14.13

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தூர்த்த வானரம் - அகழியைத் தூர்த்த வானரங்கள்; சுள்ளி பறித்து - மராமரங்களைப் பிடுங்கி; இடை சீர்த்த பேரணை தன்னையும் சிந்தின - அகழியின் இடையே (போக்குவரவுக்காகச்) சிறந்திருந்த பெரிய பாலங்களையும் அழித்து விட்டன; வார்த்தது அன்ன - உருக்கி வார்த்தாற்போன்ற; மதிலின் வரம்பு கொண்டு - மதிலின் உச்சியை அடைந்து; ஆர்கலி காரொடும் அஞ்ச - கடலும் கார் முகிலும் அச்சம் கொள்ளுமாறு; ஆர்த்த - முழங்கின.

வானரம் இட்ட ஆரவாரத்திற்குத்தாம் நிகர் ஆகாமையால் கடலும் மேகமும் அஞ்சும் என்பாராய் "ஆர்கலி காரொடும் அஞ்ச ஆர்த்த" என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The monkeys that had filled the moat tore up the trees, and in between
  2. they broke down even the fine, great bridges;
  3. then, taking the crest of the wall that looked as if cast of molten metal,
  4. they roared, so that the sea along with the clouds was afraid.

What the poem says

With the moat filled, the monkeys pull up the trees and smash the great bridges that crossed it. They climb to the top of the wall, which looks as if it had been cast from molten metal, and roar so loudly that the sea and the thunderclouds, outdone, are frightened.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūrtta vāṉaram cuḷḷi paṟittu iṭai,
cīrtta pēr aṇaitaṉṉaiyum cintiṉa;
vārttatu aṉṉa matiliṉ varampukoṇṭu
ārtta ārkali kāroṭum añcavē.