கம்பராமாயணம் 7073 · யுத்த 14.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எண்தீர் மணி வெறுக்கை ஓங்கிய - எண்ணில் அடங்காத மாணிக்கங்களாகிய செல்வம் நிறைந்த; மேரு விழுக் கல்லால் - மேரு மலையென்னும் எடைக்கல்லினால்; நிறுக்க - எடை போட; நேர் வரும் - (அதற்கு) எடை சமமாக வரத்தக்க; வீரர் நெருக்கலால் - வானர வீரர்கள் அழுத்தியமையால்; பொறுக்கலாது - (அந்தக் கனத்தைத்) தாங்க மாட்டாமல்; மதில் தரை புக்கதால் - (இலங்கை மாநகரின்) மதில் கீழே அழுந்தியமையால்; இறுக்க வேண்டுவது இல்லை - (அந்த இலங்கை மதிலை) (வானரவீரர்கள்) உடைத்தெறிய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
பொன்னும் மணியும் பொதிந்த மேருமலையை ஒரு தட்டிலும், வானர வீரர்களை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்தால், வானர வீரர்கள் தட்டே தாழும் என வானரங்களின் எடையும் தொகையும் சுட்டி வியந்தவாறு, உயர்வு நவிற்சியணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There was no need to break it down: with countless gems
- for its towering wealth, Mēru as the great weight-stone
- against which they would balance, so heavily did the heroes press on it
- that the wall could not bear it, and sank into the ground.
What the poem says
The monkeys do not have to break the wall down. So many of them crowd onto it that their weight, which would outweigh Mount Mēru with all its gold and gems if the two were set on a pair of scales, drives the wall down into the earth. It is a deliberate exaggeration of their number and might.