கம்பராமாயணம் 7079 · யுத்த 14.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாக்கை வீரர் - பெரிய கைகளையுடைய வானர வீரர்கள்; மலைந்த கல் - போரில் வீசிய கற்கள்; தாக்கி - மோதி; வஞ்சர் தலைகள் தகர்த்தலால் - வஞ்சகராம் அரக்கர்களின் தலைகளைப் பிளப்பதால்; நாக்கின் ஊடும் - அந்த அரக்கர்களின் வாய் வழியாகவும்; செவியினும் - காது வழியாகவும்; நாகம்வாழ் மூக்கின் ஊடும் - நாகப்பாம்புகள் வசிக்கின்ற மூக்கு வழியாகவும்; மூளை சொரிந்தன - (அவர்கள்) மூளைகள் வெளிப்பட்டன.
வானரவீரர்களின் கரங்கள் மலைகளைப் பெயர்க்கவும் ஏந்தவும் வல்ல வலிமை வாய்ந்தனவாதலின் "மாக்கை" என்றார். நாக்கு ஆகுபெயராய் வாயைக் குறித்தது. நாக்கும், மூக்கும், வாயும் தலையில் தொளைகள் உள்ள உறுப்புகளாதலின், அத்தொளைகள் வழியே அழுத்தப் பெற்ற மூளைகள் வெளிவந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the stones the great-handed monkey heroes hurled
- struck and shattered the heads of the treacherous ones,
- through their mouths, through their ears, and through their noses
- where serpents dwell, their brains came pouring out.
What the poem says
The monkeys, whose huge hands can lift mountains, hurl rocks that crush the demons' skulls, and their brains burst out through every opening in the head. The demons' nostrils are so huge that the poet says snakes live in them.