கம்பராமாயணம் 7082 · யுத்த 14.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1எதிர்த்த வானரம் யாக்கையொடு இற்றன;
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன;
கதிர்க் கொடுங்கண் அரக்கர் கரங்களால்
விதிர்த்து எறிந்த விலங்கு இலை வேலினே.
பொருள் · Meaning in Tamil
கதிர் கொடு கண் அரக்கர் கரங்களால் - (வெகுளியில்) ஒளியுடைய கண்களைக்கொண்ட அரக்கருடைய கைகளால்; விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலின் - அசைத்து வீசிய ஒளிர்கின்ற இலை வடிவான வேல்களால்; எதிர்த்த வானரம் - எதிர்த்துப் போரிட்ட வானரங்கள்; மாக்கையோடு இற்றன - பெரிய கரங்கள் அறுபட்டு மடிந்தனவாகி; மதில்புறம் கண்டு மண்ணில் மறைந்தன - மதிலுக்கு வெளிப்புறத்தில் மண்ணிலே (வீழ்ந்து) மறைந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The monkeys who fought back were cut down, their great arms with them;
- they fell outside the wall and vanished into the earth,
- struck by the bright leaf-bladed spears that the demons, with fierce, blazing eyes,
- shook and hurled from their hands.
What the poem says
The demons fight back with burning eyes, brandishing and hurling leaf-bladed spears. The monkeys they hit lose their huge arms, fall outside the wall and disappear into the ground.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1etirtta vāṉaram māk kaiyoṭu iṟṟaṉa;
matil puṟaṅ kaṇṭu maṇṇil maṟaintaṉa;
katirk koṭuṅ kaṇ arakkar karaṅkaḷāl
vitirttu eṟinta viḷaṅku ilai vēliṉē.