கம்பராமாயணம் 7084 · யுத்த 14.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெம்கண் நிறைந்த அரக்கர் - கொடுமை நிறைந்த கண்களையுடைய அரக்கர்கள்; எறிந்தும் - (பல படைக்கருவிகளை) வீசியும்; எய்தும் - (அம்புகளை) ஏவியும்; எழு - இரும்புத் தூண் போன்ற; முளை தண்டு கொண்டு அறைந்தும் - மூங்கில் கோல்களைக் கொண்டு அடித்தும்; வெம் அயில் ஆகத்து அழுத்தியும் - கடுமையான வேல்களை உடலில் புதையுமாறு அழுத்தியும்; நெருக்கலால் - நெருக்கியதனால்; வானர வீரர் குழுக்கள் குறைந்த - குரங்கு வீரர்கள் கூட்டம் அளவில் குறைந்து போயிற்று.
எழு - இரும்புத்தூண்; முளை - மூங்கில். "முளைவாய் எயிற்ற முள் உகிர் ஞமலி" (குறிஞ்சிப். 131) எனுமிடத்து, முளை - மூங்கில் எனும் பொருளில் வந்தமை காணலாம். "நிறைந்த வெங்கண் அரக்கர் குறைந்த வானர வீரர்" என்பதில் அடிமுரணும் சொல் நயமும் தோன்றுதல் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hurling weapons, shooting arrows, clubbing with iron bars and bamboo staves,
- driving cruel spears deep into bodies,
- the fierce-eyed demons, in their full numbers, pressed so hard
- that the hosts of the monkey heroes dwindled.
What the poem says
The tide turns. The demons throw missiles, shoot arrows, beat with iron bars and bamboo staves and drive spears into the monkeys' bodies, and the monkey ranks thin out.
The Tamil contrasts the first and last lines: the demons are "full" (niṟainta) and the monkeys are "reduced" (kuṟainta).