கம்பராமாயணம் 7085 · யுத்த 14.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செப்பில் செம்புனல் தோய்ந்த செம்பொன்மதில் - செம்பை உருக்கிய ஒழுக்கினைப்போல, இரத்தம் தோய்ந்த செம்பொன்னால் ஆன (இலங்கை) மதிலானது; சூழ் வரை - சுற்றி நின்ற ஒரு மலை; துப்பில் செய்தது போன்றது - செம்பவழத்தால் ஆக்கியது போலத் தோற்றம் அளித்தது; உதிரத்து ஒழுக்கம் - இரத்தப் பெருக்கம்; குப்புற்று பிணக்குன்று ஈர் - தலைகீழாக வீழ்ந்த பிண மலைகளை இழுத்து; சுமந்து கொண்டு - தாங்கிக் கொண்டு; உப்பில் சென்றது - உப்புக்கடலை நோக்கிப் பாய்ந்து சென்றது.
மதில் இரத்தம் தோய்ந்து கிடந்தமையால், செம்பவழத்தால் ஆன மலை போன்று காட்சியளித்தது. பிணங்களைத் தோளில் சுமந்துகொண்டு செல்கையில், தலைகுப்புற வீழ்ந்து கிடப்பது இயல்பு. இரத்த ஆறு, பிணங்களைத் தலைகீழாக்கி கடலை நோக்கி இழுத்துச் சென்றது. உப்பு - ஆகு பெயராய் கடலைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if with molten copper, steeped in red blood, the golden wall
- looked like a ring of hills made out of coral;
- and dragging and carrying heaps of corpses flung face down,
- the stream of blood flowed away into the salt sea.
What the poem says
So much blood has splashed the golden wall that it looks like a range of hills made of red coral, or as if molten copper had been poured over it. A river of blood runs down to the sea, carrying piles of corpses tumbled head first, the way bodies hang when they are carried over the shoulder.