கம்பராமாயணம் 7086 · யுத்த 14.28

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இந்திரற்கும் பற்றுதல் அரிய இலங்கை - (தேவர் தலைவனான) இந்திரனாலும் கைப்பற்றிக் கொள்ளுதற்கு அரியதான இலங்கை மாநகரானது; வந்து இரைத்த மயங்கின பறவை - அங்கு பிணம் தின்ன வந்து கூச்சலிட்ட பறவைகளின் பல்வகைக் கூட்டம்; அந்தரத்தின் நெருங்கலின் - ஆகாயத்தில் (இடைவெளியின்றி) நெருங்கியதால்; அங்கு ஒரு பந்தர் பெற்றது போன்றது - அவ்விடத்தின் மேலே பந்தல் (வேய்ந்து) இட்டாற்போன்று காட்சி தந்தது.

போர்க்களக்காட்சியைத் தேவர்கள் காண இயலாதவாறு, பறவைகள் பந்தலிட்டு மறைத்தன என்பது ஒரு குறிப்பாம். "மயங்கின பறவை" என்பது, பல்வகையான பறவைக் கூட்டத்தைக் குறித்து நின்றது. தேவரும் வாய்திறக்க அஞ்சும் இலங்கையில் பறவைகளும் கூச்சலிடும் துணிவைப் பெற்றனவே! என வியந்தவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The birds of every kind that came and screeched
  2. crowded so thick in the sky that there
  3. it seemed a canopy had been raised over
  4. Ilaṅkai, which even Intiraṉ could not seize.

What the poem says

Carrion birds of every kind flock in, shrieking, to feed on the dead, and they fill the sky so densely that they seem to spread a canopy over Ilaṅkai.

The commentary sees two hints here. The canopy keeps the gods from watching the slaughter. And in the city where even the gods were afraid to open their mouths, mere birds now dare to screech freely.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantu iraitta paṟavai mayaṅkiṉa
antarattil neruṅkaliṉ aṅku oru
pantar peṟṟatu pōṉṟatu paṟṟutal
intiraṟkum ariya ilaṅkaiyē.