கம்பராமாயணம் 7089 · யுத்த 14.31

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொழிந்த சோரிப் புதுப் புனல் பொங்கி மீ
வழிந்த மாமதில் கைவிட்டு வானரம்
ஒழிந்த மேருவின் உம்பர் புக்கு இம்பரின்
இழிந்த மாக்கடல் என்ன இழிந்ததே.

பொருள் · Meaning in Tamil

வானரம் - குரங்குகள்; ஒழிந்த - வலிமை குறைந்தனவாய்; பொழிந்த சோரிப் புதுப்புனல் - சொரிந்த உதிரம் என்னும் புது வெள்ளம் பொங்கி; மீவழிந்த மாமதில் கைவிட்டு - மேலே வழியப் பெற்ற பெரிய மதிலினைக் கைவிட்டு விட்டு; மேருவின் உம்பர் விட்டு இம்பரின் இழிந்த - மேருகிரியின் மேலிடத்தை விட்டு அகன்று மற்றொரு பக்கத்தில் இறங்கிய; மாகடல் என்ன இழிந்த - பெரிய கடலே போன்று கீழே இறங்கின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The fresh flood of shed blood surged up and spilled over
  2. the great wall; and letting go of it, the monkeys,
  3. spent, like a great sea that has left the heights of Mēru and here below
  4. comes pouring down, came pouring down.

What the poem says

The fresh blood has risen up and spilled over the top of the wall. The worn-out monkeys give up their hold on it and pour back down, like a great sea tumbling off the summit of Mount Mēru.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poḻinta cōrip putup puṉal poṅki mī
vaḻinta mā matil kaiviṭṭu vāṉaram
oḻinta mēruviṉ umparviṭṭu impariṉ
iḻinta māk kaṭal eṉṉa iḻintatē.