கம்பராமாயணம் 7090 · யுத்த 14.32

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விதன வெங்கண் இராக்கதர் வெள்ளம் - துயரம் புரியவல்ல கொடிய கண்களையுடைய இராக்கதர் பெருங்கூட்டத் தொகுதிகள்; பதனமும் - மதிலில் உள்ள மேடைகளிலும்; மதிலும் - மதில்களிலும்; படை நாஞ்சிலும் - அம்புகள் விடுதற்குரிய (ஏவறை) முடுக்குகளிலும்; கதன வாயிலும் - (பகைவர்) கலங்குதற்குரிய கோபுர வாயிலிலும்; கட்டும் அட்டாலையும் - மதில் மேல் கட்டப்பட்ட மண்டபங்களிலும்; முதலயாவையும் - (இவை) முதலான எல்லா இடங்களிலும்; புக்குற்று முற்றின - புகுந்து நிரம்பின.

பதணம் - மதில்களின் உள் உள்ள மேடை "நெடுமதில் நிறைப் பதணத்து" (பதிற்றுப். 22-25) என்பதனால் இச்சொல் பதணம் எனவும் வழங்கும் எனத் தெரிகிறது. நாஞ்சில் - மதில் உறுப்புக்களுள் ஒன்று. அம்பு ஏவும் துளைகள் உள்ள இடம். ஞாயில் எனவும் வழங்கும். அட்டாலை - கோட்டை மதில் மேல் கட்டப்படும் மண்டபம். அரக்கர் மட்டுமே அன்றிக் கோட்டை வாயிலும் கலக்கம் செய்யும் என்பார், "கதன வாயிலும்" என்றார். "கோட்டைக்கு அரணாகப் போடப்பட்ட உட்படிகள்" என்பது பழைய உரை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The platforms and the walls and the loopholes for weapons,
  2. the fearsome gateways, the halls built upon the ramparts,
  3. all these and the rest they entered and filled,
  4. the floods of demons with fierce eyes that bring grief.

What the poem says

As the monkeys fall back, the demons take over every part of the defences: the fighting platforms, the walls, the arrow slits, the gate towers that strike fear into attackers, and the pavilions on the ramparts. The commentary explains these old Tamil terms for parts of a fortification.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pataṇamum matilum paṭai nāñcilum
kataṉa vāyilum kaṭṭum aṭṭālaiyum
mutala yāvaiyum pukkuṟṟu muṟṟiṉa
vitaṉa veṅ kaṇ irākkatar veḷḷamē.