கம்பராமாயணம் 7091 · யுத்த 14.33

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாய்ந்த சோரிப் பரவையில் பற்பல
நீந்தி ஏகும் நெருக்கு இடைச் சிற்சில
சாய்ந்து சாய்ந்து சரம்படத் தள்ளல் உற்று
ஓய்ந்து வீழ்ந்த; சிலசில ஓடின.

பொருள் · Meaning in Tamil

நெருக்கிடை - (அரக்கர்) நெருங்கி வந்தமையால்; செல்வன - (வேறிடங்கட்குத் தப்பிச்) செல்கின்ற; பற்பல - பலவாய குரங்குகள்; பாய்ந்த சோரிப் பரவையில் - பாய்ந்து ஓடிச் செல்கின்ற உதிரக் கடலில்; நீந்தி ஏகும் - நீந்திக் கடப்பதற்கு முயலும்; சிலசில - சிற்சில குரங்குகள்; சாய்ந்து சாய்ந்து - மிகவும் தளர்ந்து; சரம்பட - (அரக்கர் விட்ட) அம்புகள் தைத்ததனால்; தள்ளல் உற்று ஓய்ந்து வீழ்ந்த - உயிர் தளர்ந்து செயலிழந்து வீழ்ந்தன; சிலசில ஓடின - சிற்சில (உயிர் தப்பிப் பிழைக்க) ஓட்டம் பிடித்தன.

உதிரவெள்ளத்தின் மிகுதி காட்ட "சோரிப்பரவை" என்றார். போரிடும் பொருட்டு மதில்களில் ஏறிய குரங்குகள், அரக்கர்களால் துரத்தப்பட்டமை கூறியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the rushing sea of blood, many
  2. that were escaping the crush and swimming across,
  3. sagging lower and lower, struck by arrows, were swept down
  4. and fell spent; a few of them ran away.

What the poem says

Pushed back by the demons, many monkeys try to escape by swimming across the "sea" of blood. Weak and pierced by arrows, they slump, sink and die; only a few manage to run for their lives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāynta cōrip paravaiyil paṟpala
nīnti ēkum nerukkiṭaic celvaṉa
cāyntu cāyntu caram paṭat taḷḷaluṟṟu
ōyntu vīḻnta; cila cila ōṭiṉa.