கம்பராமாயணம் 7092 · யுத்த 14.34

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தழிய வானர மாக்கடல் சாய்தலும்
பொழியும் வெம்படைப் போர்க்கடல் ஆர்த்ததால்
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து
அழியும் மாக்கடல் ஆர்ப்பு எடுத்தென்னவே.

பொருள் · Meaning in Tamil

ஒழியும் காலத்து - யாவும் அழியும் ஊழிக் காலத்தில்; ஒரு மூன்று உலகும் ஒத்து - மூன்று உலகங்களும் ஒன்று சேர்ந்து; அழியும் - அழிவதற்குக் காரணமான; மாகடல் - பெருங்கடலானது; ஆர்ப்பு எடுத்து அன்ன - பேரொலி எழுப்பியது போன்று; தழிய மாகடல் வானரம் சாய்தலும் - (மதிலைத்) தழுவியிருந்த பெருங்கடல் போன்ற வானரப் படைகள் வலிமை குன்றிய அளவில்; பொழியும் வெம்படை - மேன்மேலும் எய்கின்ற கொடிய போர்க்கருவிகளையுடைய; போர்க்கடல் ஆர்த்த - போர் செய்யும் கடல் போன்ற இராக்கத சேனை ஆர்த்தது.

கடல் ஆர்த்த - ஒருமைப் பன்மை மயக்கம். சுவர்க்கம், மத்திமம், பாதலம் என உலகை மூன்றாகக் கூறுதல் மரபாதலின் "உலகொரு மூன்றும்" என்றார். உலகம் கடலால் அழியும் என்பது முன்னோர் துணிபாதலின், "ஒழியும் காலத்து உலகொரு மூன்றும் ஒத்து அழியும் மாக்கடல்" என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the great sea of monkeys that had clung to the wall gave way,
  2. the battle-sea of showering, cruel weapons roared,
  3. as when, at the time of the ending, the three worlds all together
  4. perish and the great ocean lifts up its roar.

What the poem says

As the monkey army, which had hugged the walls like a sea, falls back, the demon army roars in triumph, raining weapons. The poet compares the roar to the ocean at the end of the age, when it rises and swallows the three worlds of heaven, earth and the underworld.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḻiya vāṉara māk kaṭal cāytalum
poḻiyum vem paṭaip pōrk kaṭal ārttavāl
oḻiyum kālattu ulaku oru mūṉṟum ottu
aḻiyum māk kaṭal ārppu eṭutteṉṉavē.