கம்பராமாயணம் 7093 · யுத்த 14.35

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முரைசும் மா முருடும் முரல் சங்கமும்
செய் காளமும்; ஆகுளி ஓசையும்
விரைசும் பல் இயம் வில் அரவத்தொடும்
திரை செய் வேலைக்கு ஒர் ஆகுலம் செய்தவே.

பொருள் · Meaning in Tamil

முரசும் - முரசுக் கருவியும்; மாமுருடும் - பெரிய முருடு என்னும் கருவியும்; முரல் சங்கமும் - முரலுகின்ற சங்கும்; உரை செய் காளமும் - புகழ் பெற்ற எக்காளமும்; ஆகுளி ஓசையும் - ஆகுளி என்னும் சிறு பறையும்; (என) விரைசு பல் இயம் - பலவகையாய்க் கலந்து ஒலிக்கும் பல்வகைக் கருவிகளின் ஓசையும்; வில் அரவத்தொடும் - வில்லிலிருந்து கணை விடுகையில் எழும் ஓசையுடன் கூடி; திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்த - அலையால் ஆர்ப்பரிக்கும் கடலுக்கும் ஒரு மனக்கலக்கத்தை உண்டாக்கிவிட்டன.

தன் ஒலியை விடப் பேர் ஒலி இல்லை என்று, "ஆர்கலி" எனும் பட்டத்தைப் பெற்றுத் தருக்கியிருந்த கடல், தன் ஒலியிலும் பேரொலியுண்டு என்பதையுணர்ந்து மனக்கலக்கம் அடைந்தது என்பதாம். முருடு - பறைப்பொது எனும் பிங்கலந்தை; மத்தளமுமாம். காளம் - எக்காளம். ஊது கொம்பு. ஆகுளி - சிறு பறை. "நுண்ணீர் ஆகுளி இரட்ட" (மதுரைக்காஞ்சி. 606). தமிழகத்திலிருந்த பல்வகைப் போர்க்கருவிகளின் பெயர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Drums, great muruṭu drums, droning conches,
  2. famed trumpets and the sound of the small āguḷi drum,
  3. many instruments mingling, together with the twang of bows,
  4. brought dismay even to the wave-tossed sea.

What the poem says

The din of the demon army is made of war drums, great muruṭu drums, conches, trumpets, the small āguḷi drum and the twang of bowstrings. Together they unsettle even the sea. The sea's Tamil title, "the roaring one," rested on the belief that nothing was louder than it, and now it learns otherwise. The commentary notes that these are the names of real Tamil war instruments.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muracum mā muruṭum mural caṅkamum
urai cey kāḷamum; ākuḷi ōcaiyum
viraicum pal iyam vil aravattoṭum
tirai cey vēlaikku or ākulam ceytavē.