கம்பராமாயணம் 7094 · யுத்த 14.36

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆய காலை. அனைத்து உலகும் தரும்
நாயகன் முகன் நாலின் நடந்து என
மேய சேனை விரிகடல் விண்குலாம்
வாயில் ஊடு புறப்பட்டு வந்ததே.

பொருள் · Meaning in Tamil

ஆயகாலை - அப்பொழுதில்; உலகு அனைத்தும் தரும் - உலகம் யாவையும் படைக்கும்; நாயகன் முகம் நாலும் நடந்தென - நான்முகப் பிரமனுடைய நான்கு வாய்களிலிருந்தும் புறப்பட்டது போல; மேய சேனை - (இலங்கையில்) பொருந்திய (அரக்கர்) சேனையாகிய; விரிகடல் - பரந்த கடலானது; விண்குலாம் வாயில் ஊடு - ஆகாயம் அளாவும் (இலங்கையின்) நான்கு வாயில்களின் வழியே; புறப்பட்டு வந்தது - வெளிப்பட்டு வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment, as though it came walking out of the four faces
  2. of the lord who brings forth all the worlds,
  3. the wide sea of the army gathered there
  4. came out through the sky-touching gates.

What the poem says

Now the demon army marches out of the city through all four of its towering gates at once. The poet compares it to the creation pouring out of the four mouths of Piramaṉ, the four-faced creator of all the worlds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āya kālai. aṉaittu ulakum tarum
nāyakaṉ mukam nālum naṭanteṉa
mēya cēṉai viri kaṭal viṇ kulām
vāyilūṭu puṟappaṭṭu vantatē.