கம்பராமாயணம் 7095 · யுத்த 14.37

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நெடிய காவதம் எட்டு நிரம்பிய
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து என
கொடியொடும் கொடி சுற்றக் கொடுத்த தண்டு
ஒடிய ஊன்றின மும்மத ஓங்கலே.

பொருள் · Meaning in Tamil

நெடிய காவதம் எட்டும் நிரம்பிய - நீண்ட எட்டுக் காதப் பரப்பும் நிறையுமாறு; மும்மத ஓங்கல் - மூன்று மதங்களையுடைய யானைகள்; படிய வாயில் - படிகளையுடைய கோட்டை வாயில்களில்; பருப்பதம் பாய்ந்தென - மலைகள் பாய்ந்து சென்றாற் போல; கொடியோடும் - (தம்மீதுள்ள) கொடிகளோடும்; கொடி சுற்றக் கொடுத்த தண்டு - பிற யானைகளின் மீதுள்ள கொடிகளோடும் (அக்கொடிகள்) சுற்றிக்கொள்ள, (அவை) கட்டியுள்ள கம்புகள்; ஒடிய ஊன்றின - ஒடியுமாறு நெருங்கி அவற்றை) ஊன்றிக்கொண்டு வெளிவந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Filling all eight long kātams,
  2. as if mountains were leaping through the stepped gateways,
  3. banner tangling with banner, so that the poles that bore them
  4. snapped, the elephants flowing with must from three places pressed on.

What the poem says

The war elephants, oozing must from temples, cheeks and mouth, surge out through the gates like mountains on the move and fill eight long kātams (leagues) of ground. They are packed so tight that their banners tangle together and the poles holding them snap.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1neṭiya kāvatam eṭṭum nirampiya
paṭiya vāyil paruppatam pāynteṉa
koṭiyoṭum koṭi cuṟṟak koṭutta taṇṭu
oṭiya ūṉṟiṉa mum mata ōṅkalē.