கம்பராமாயணம் 7103 · யுத்த 14.45

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1களிறும் மாவும் நிருதரும் கால் அற
ஒளிறும் மாமணித் தேரும் உருட்டி வெங்
குளிறு சோரி ஒழுக கொதித்து இடை
வெளிறு இலா மரமே கொண்டு வீசினான்.

பொருள் · Meaning in Tamil

களிறும் மாவும் நிருதரும் கால் அற - யானைகளும் குதிரைகளும் அரக்க வீரர்களும் கால் ஒடிந்து வீழுமாறும்; ஒளிறும் மாமணித் தேரும் உருட்டி - ஒளிர்கின்ற பெரிய மாணிக்கத் தேர்களைக் கவிழுமாறும்; வெம்குளிறு சோரி ஒழுக - வெப்பமுடையதாய் ஒலித்துக் கொண்டு உதிரம் ஆறாய்ப் பெருக்கெடுக்குமாறும்; கொதித்து - மனத்தில் வெம்மையோடு; இடை - நடுவில்; வெளிறு இலா - வெண்மையில்லாத (முழுவயிரம் பாய்ந்த); மரமே கொண்டு வீசினான் - அந்த மராமரத்தைக் கொண்டே எறிந்தான்.

பிற போர் ஆயுதங்கள் செய்ய இயலாத அழிவை எளிய மரத்தையே கொண்டு சுக்கிரீவன் செய்து முடித்தலால், "எளிய மரமே கொண்டு வீசினான்" என்றார். ஏகாரம் - பிரிநிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that elephants, horses and demons had their legs broken,
  2. and the chariots of great shining gems were rolled over, and hot blood
  3. flowed roaring, raging in their midst
  4. he lashed out with nothing but that tree, hard to its core.

What the poem says

With nothing but the tree, solid hardwood all through with no soft sapwood, Cukkirīvaṉ smashes the legs of elephants, horses and demons, overturns jewelled chariots and sets rivers of hot blood roaring. One plain tree does what no forged weapon could.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḷiṟum māvum nirutarum kāl aṟa
oḷiṟu mā maṇit tērum uruṭṭi veṅ
kuḷiṟu cōri oḻuka kotittu iṭai
veḷiṟu ilā maramē koṇṭu vīciṉāṉ.