கம்பராமாயணம் 7106 · யுத்த 14.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நிமிர்ந்து கடும் செரு - உயர்ந்து கடுமையாக நிகழ்ந்த யுத்தத்தில்; மற்கடங்கள் - குரங்குகள்; வலிந்து - வலிமையோடு; கற்கள் தந்து மலைந்திட - கற்களை வீசிப் போரிட; தற்கு அடங்கி - (தம்) கர்வம் அழிந்து; உலந்தவர் தம் உயிர் - இறந்தவர்களான அரக்கர்களின் உயிர்கள்; தெற்கு அடங்க - தென்திசை முழுவதும்; நிறைந்து செறிந்த - நிறைந்து நெருங்கின.
மர்க்கடம் - குரங்கு. தற்கு - தருக்கு; செருக்கு. எதுகை நோக்கி மற்கடம் எனவும், தற்கு எனவும் வந்தன, செய்யுளாதலின். தெற்கு - இயமனின் திசை. ஆகுபெயராய் அவன் உலகைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As in the fierce battle that rose to its height, hurling stones,
- the monkeys fought on with all their strength,
- the lives of those who perished, their pride brought low,
- crowded and filled the whole of the south.
What the poem says
The battle reaches its peak, and the monkeys fight on with rocks. So many demons die, their arrogance crushed, that their departing souls pack the southern quarter, the realm of Yama, god of death, to bursting.