கம்பராமாயணம் 7107 · யுத்த 14.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாடுகின்றன பேய்க் கணம் பல விதத்து
ஆடுகின்ற அறுகுறை; ஆழ் கடற்கு
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல்
நாடுகின்றனர் கற்புடை நங்கைமார்.
பொருள் · Meaning in Tamil
பேய்க்கணம் பாடுகின்றன - பேயின் கூட்டங்கள் (போர்க்களத்தில்) பாடத் தொடங்கின; அறுகுறை - தலைஅற்ற கவந்தங்கள்; பல்விதத்து ஆடுகின்ற - பலவகையாக ஆடத் தொடங்கின; உதிரம் - இரத்தமானது; ஆழ்கடற்கு - ஆழமிக்க கடலைநோக்கி; ஓடுகின்ற - ஓடத்தொடங்கின; கற்புடை நங்கைமார் - கற்புடைய மகளிர்; புகுந்து - போர்களத்துக்குள் புகுந்து; உடல் நாடுகின்றனர் - (இறந்துபட்ட) தத்தம் கணவன்மார்களின் உடலைத் தேடத் தொடங்கினர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hosts of ghouls are singing; in many ways
- the headless trunks are dancing; towards the deep sea
- the blood is running; and coming onto the field, the chaste wives
- are searching for the bodies.
What the poem says
The poet paints the battlefield in four quick strokes: ghouls singing over the dead, headless bodies still jerking as if dancing, blood running to the sea, and faithful wives walking among the corpses looking for their husbands' bodies.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāṭukiṉṟaṉa pēyk kaṇam pal vitattu
āṭukiṉṟa aṟu kuṟai; āḻ kaṭaṟku
ōṭukiṉṟa utiram pukuntu uṭal
nāṭukiṉṟaṉar kaṟpuṭai naṅkaimār.