கம்பராமாயணம் 7108 · யுத்த 14.50

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பட்ட யானை - வானரங்களால் தாக்கப்பட்டு மாண்ட யானைகளிலிருந்து; அழிபுனல் யாறு எலாம் - பெருகிய இரத்தத்தால் ஆன ஆறுகள் எல்லாம்; பானல்பட்ட - கடலிற் சென்று கலந்தன; பல்கணை மாரியின் சோனைபட்டது - அரக்கரின் பல்வகையான அம்பு மழையால் விடாமழை தோற்றது; சொல் அரும் - (அதனால் இவ்வளவு என்று) சொல்ல இயலாத; வானரச் சேனை பட்டது - குரங்குச் சேனை இறந்து பட்டது; செம்புண் நீர் பட்டது - (அதனால் களம் எங்கும்) சிவந்த இரத்தமே (கண்ணில்) பட்டது.

"யானை பட்ட வழி" எனக் கொண்டு, யானைகள் மாண்டு கிடந்த வழிகளில் எல்லாம் பெருகி ஓடிய குருதி, ஆறுகளாகி, அருகில் உள்ள கடலில் சங்கமித்தன எனக் கூறினுமாம். பானல் - கடல். யானைகளின் இரத்தமும், வானரங்களின் இரத்தமும் வேறுபாடின்றிக் கடலில் கலந்தன என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the rivers of streaming blood from the fallen elephants
  2. ran into the sea; by the shower of countless arrows
  3. the steady rain was outdone; the monkey army, past all telling,
  4. fell; and everywhere red blood from wounds met the eye.

What the poem says

The verse turns on the word paṭṭa ("fell," "was struck," "met"), repeated in each clause. The blood of the slain elephants runs in rivers into the sea. The demons' arrows fall thicker than monsoon rain, monkeys beyond counting die, and wherever one looks there is only red blood. Elephant blood and monkey blood mix in the sea without distinction.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāṉai paṭṭa aḻi puṉal yāṟu elām
pāṉal paṭṭa; pala kaṇai māriyiṉ
cōṉai paṭṭatu; colla arum vāṉarac
cēṉai paṭṭatu; paṭṭatu cem puṇṇīr.