கம்பராமாயணம் 7109 · யுத்த 14.51

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காய்ந்த வானர வீரர் கரத்தினால்
தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம்புண் நீர்
பாய்ந்தது; ஆனைப் படுகளம் பாழ்படச்
சாய்ந்ததால் நிருதக் கடல் தானையே.

பொருள் · Meaning in Tamil

காய்ந்த வானர வீரர் கரத்தினால் - வெகுண்டெழுந்த வானரப்படை வீரர்களின் கைகளால்; தேய்ந்த ஆயுளர் ஆனவர் - குறைந்த ஆயுளையுடையவராகிப் போன அரக்கர்களுடைய; செம்புண் நீர் பாய்ந்த - சிவந்த இரத்தம் (வெள்ளமாகப்) பாய்ந்த; தானைப் படுகளம் பாழ்பட - சேனைகள் இறந்து கிடந்த போர்க்களம் பாழாகும்படி; நிருதக் கடல்தானை - அரக்கர்களுடைய படையாகிய கடல்; சாய்ந்தது - வலி குன்றியது.

வானரர் காய்வு (சினம்), அரக்கர் தேய்வுக்குக் காரணம் ஆயிற்று. ஆயுள் தேய்ந்தவர் எனவர உரிய தொடரை "தேய்ந்த ஆயுளர்" என்று ஓர் நயம். களத்தில் உள்ளவர் மடிவது கண்டு, மற்றவர் அஞ்சி ஓடினர் ஆதலால், "களம் பட, சாய்ந்தது நிருதக் கடல் தானை" என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At the hands of the furious monkey heroes,
  2. those whose lifespans had worn away, their red blood
  3. flooding the field where the army lay, so that it was laid waste,
  4. the sea of the demon army gave way.

What the poem says

The monkeys rally in fury and the demons' lives are cut short. The battlefield lies in ruins, flooded with their blood. Seeing their comrades die, the rest lose heart, and the great sea of the demon army falls back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāynta vāṉara vīrar karattiṉāl
tēynta āyuḷar āṉavar cem puṇṇīr
pāynta tāṉaip paṭu kaḷam pāḻpaṭac
cāyntatāl nirutak kaṭal tāṉaiyē.