கம்பராமாயணம் 7110 · யுத்த 14.52

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தங்கள் மாப்படை சாய்தலும் - தங்களுடைய (அரக்கருடைய) பெரும்படை வலி குன்றிய போது; வெங்கண் தீ எழ - கண்களில் வெப்பமிக்க தீ(ப்பொறி) எழுமாறு; வாள் அரக்கன் - கொடிய அரக்கனாகிய வச்சிரமுட்டி; விரைதேரினை - வேகமாக வரும் தேரினை; கங்கசாலம் தொடர - பருந்துக் கூட்டங்கள் பின்தொடர்ந்து வர; கடல்செலூஉம் வங்கம் ஆம் என - கடலிலே செல்லும் கப்பல் போல் (செலுத்தி); வந்து எதிர் தாக்கினான் - வந்து எதிரே தாக்கத் தொடங்கினான்.

இங்குக் கூறப்படும் அரக்கன் வச்சிரமுட்டி என்பது இப்படலத்து 55 ஆம் பாடலால் விளங்கும். கங்கசாலம் - பருந்துக் கூட்டம். "கங்கமொடு காகம் மிடையக் கடலின் ஓடும் வங்கமெனல் ஆயதொரு தேரின் மிசை வந்தான்" (3034) என்பார் முன்னும். பெருவீரர்கள் போர்க்களம் செல்கையில், தமக்குக் களத்தில் இரை மிகுதிபடக் கிட்டும் என்று பருந்துகள் பின் தொடரும். "கூற்று இனத்து அன்னார்கொடுவில் உடன் ஏந்தி, பாற்றினம் பின்படர முன்படர்ந்து" (பு. வெ. மாலை. 1,5) என்பது காண்க. குருதியை வெள்ளம் என்றதற்கேற்ப, அதனிடை ஓடும் தேரினை வங்கம் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As their great army gave way, with fire rising
  2. from his fierce eyes, a sword-bearing demon drove his swift chariot,
  3. with flocks of kites following behind it, like a ship sailing the sea,
  4. and came on and struck at them.

What the poem says

As the demon army gives way, one of its champions charges in, eyes blazing. A later verse names him: Vacciramuṭṭi. His chariot moves through the flood of blood like a ship at sea, and flocks of kites follow it, since carrion birds know that a great warrior's path will leave them plenty to eat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṅkaḷ māp paṭai cāytalum tī eḻa
veṅ kaṇ vāḷ arakkaṉ virai tēriṉai
kaṅka cālam toṭarak kaṭaṟ celūum
vaṅkam ām eṉa vantu etir tākkiṉāṉ.