கம்பராமாயணம் 7112 · யுத்த 14.54

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நோக்கி - (அந்நிலை) கண்டு (சுக்கிரீவன்); வஞ்சன் நொறில் வயமாப்பரி - வஞ்சகன் ஆகிய வச்சிரமுட்டியின் விரைந்து செல்லும் வலிய குதிரைகள்; வீக்கு தேரின் மீது - பூட்டிய தேரின் மீது; எழப் பாய்ந்து - எழுந்து பாய்ந்து; தோள் தூக்கு தூணியும் வில்லும் - தோளில் தொங்க விட்டிருந்த அம்பறாத் தூணியையும் வில்லினையும்; தொலைத்து - அறுத்து; அவன் யாக்கையும் - அவனுடைய உடலையும்; சிதைத்திட்டு எழுந்து ஏகினான் - அழித்துவிட்டு, (அங்கிருந்து) கிளம்பிச்சென்றான்.

நொறில் - விரைவு. "நொறில் பறித்தேர் பட நூறி" (3034) என்பார் முன்னும். சிதைத்திட்டு - 'இட்டு' துணைவினை. தம் அழிவிற்குக் காரண கருத்தனாகிய வச்சிரமுட்டியை மாய்த்து, படைத்தலைவன் தான் என நிரூபித்தான் சுக்கிரீவன். "தானை படைத்தகையால் பாடுபெறும்" (குறள். 768) எனும் வள்ளுவர் வாய்மொழி உண்மையாதல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing this, onto the chariot yoked with the treacherous one's swift, strong steeds
  2. he leapt up, and the quiver slung from his shoulder
  3. and his bow he destroyed, and that one's
  4. body he shattered too, and sprang down and went on.

What the poem says

Cukkirīvaṉ leaps onto Vacciramuṭṭi's chariot, which is drawn by swift horses, destroys his quiver and bow, kills him and springs back into the fight.

By killing the warrior who was wrecking his army, Cukkirīvaṉ shows himself a real commander. As the Tirukkuṟaḷ says, an army wins its fame through the quality of its leader.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nōkki vañcaṉ noṟil vaya māp pari
vīkku tēriṉiṉ mītu eḻap pāyntu tōḷ
tūkku tūṇiyum villum tolaittu avaṉ
yākkaiyum citaittiṭṭu eḻuntu ēkiṉāṉ.