கம்பராமாயணம் 7113 · யுத்த 14.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மலை குலைந்தென - மலை நிலை குலைந்தாற்போல; வச்சிரமுட்டி - வச்சிரமுட்டியானவன்; தன் நிலை குலைந்து விழுதலின் - தன் நிலைதடுமாறி விழுந்ததனால்; நின்றுளார் - (அவனைச் சார்ந்து) நின்றிருந்த அரக்கர்கள்; குலை குலைந்து - நடுநடுங்கி; கொடிநகர் நோக்கினர் - கொடிகள் உயர்ந்த இலங்கை மாநகரை நோக்கித் திரும்பினர்; அலை கிளர்ந்தென வானரம் ஆர்த்த - அலைகள் பொங்கி எழுந்தாற்போல வானரங்கள் பேரொலி செய்தன.
இப்பாடலின் தொடைப்பொலிவும், நடைநயமும் இன்பந் தருபவை. "மலை குலைந்தென" என வச்சிரமுட்டியைக் குறிப்பதனால், "அவன் அளக்கலாகா அளவும் பெருமையும், துளக்கலாகா நிலையும் தோற்றமும்" (நன். பொதுப்) கற்பார் கண் முன் நிறுத்துகின்றார் கவிஞர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As Vacciramuṭṭi, like a mountain toppling,
- lost his footing and fell, those who stood by him
- shook with fear and turned towards the bannered city;
- and the monkeys roared like the surging waves.
What the poem says
Vacciramuṭṭi falls like a mountain collapsing, and the comparison conveys how huge and immovable he seemed. The demons around him tremble and turn back towards the city, and the monkeys roar like a rising sea. The commentary praises the music of the verse's rhymes and rhythm.