கம்பராமாயணம் 7114 · யுத்த 14.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீழி வெங்கண் இராக்கதர் வெம்படை - வீழிக்கனி போன்று சிவந்த கொடுங்கண்களையுடைய அரக்கரின் கொடும்படை; ஊழி ஆழி கிளர்ந்தென - ஊழிக்காலத்தே கடல் பொங்கியெழுந்தது போல; ஓங்கின - மேல் எழுந்து வந்தன; கீழை வாயிலில் கிட்டலும் - அவை கிழக்கு வாசலை அடைதலும்; சூழும் வானர வீரர் துவன்றி முட்டினர் - சுற்றிலும் உள்ள வானரப்படை வீரர்கள் நெருக்கி தாக்கினர்
வீழி - ஒரு கனி; செந்நிறமுடையது. வெகுளியால் எப்போதும் சிவந்திருக்கும் அரக்கர் கண்களுக்கு உவமை. கீழை வாசல் வானரப்படைத் தலைவன் நீலன் ஆவான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fierce army of the demons, with cruel eyes red as vīḻi fruit,
- surged up like the ocean at the end of the age;
- as it drew near the eastern gate, they met it head on,
- the monkey heroes all around, crowding in.
What the poem says
The scene moves to the eastern gate, held by Nīlaṉ. A demon army surges forward like the ocean at the end of time; their eyes are always red with anger, like the red vīḻi fruit. The monkeys there crowd round and meet the charge.