கம்பராமாயணம் 7115 · யுத்த 14.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆலம் அன்ன அரக்கர் - கொடிய நஞ்சு போன்ற அரக்கர்கள்; சூலம், வாள், அயில், தோமரம், சக்கரம், வாலம், வாளி - சூலம், வாள், மழு, தோமரம், சக்கரம், பிண்டி பாலம், அம்பு (முதலிய) ஆயுதங்களை; மழையின் வழங்கி - மழை போன்று பொழிந்து; அடர்த்தலும் - எதிர்த்தபோது; கவிக்குலம் - வானரக்கூட்டங்கள்; காலும் வாலும் துமிந்த - கால்களும் வால்களும் துண்டிக்கப்பட்டன ஆயின.
சூலம் - முத்தலைவேல். தோமரம் - தண்டு; இரும்புலக்கையுமாம். எறியீட்டி என்பாரும் உளர். வாலம் - பிண்டிபாலம். ஆலம் - நஞ்சு. அரக்கர் ஆலத்துக்கு ஒப்பு. "ஆலம் அன்னவர்க்கு" (கம்ப. 5351)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Tridents, swords, blades, iron clubs, discuses,
- piṇṭipālam spears and arrows they poured out like rain,
- and as the demons, deadly as poison, pressed the attack,
- the monkey hosts were hacked through, legs and tails alike.
What the poem says
The demons, as deadly as poison, rain down every kind of weapon on the monkeys at the eastern gate: tridents, swords, blades, iron clubs, discuses, piṇṭipālam spears and arrows. Monkeys fall with their legs and tails cut off.