கம்பராமாயணம் 7118 · யுத்த 14.60

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எரியின் மைந்தன் - (அப்போது) அக்கினியின் புதல்வனான நீலன்; இருநிலம் கீழ் உற - பெருமைக்குரிய பூமிக்குள் வேரூன்றி; விரிய நின்ற மராமரம் - பரவி நின்ற மராமரம் ஒன்றை; வேரொடும் திரிய வாங்கி - வேரோடு திருகி எடுத்து; நிருதர் சேனைபோய் நெரிய - அரக்கரின் கொடிய படைகள் தூளாகுமாறு; ஊழி நெருப்பு என வீசினான் - ஊழிக்காலத்து எழும் நெருப்பைப் போல வீசி எறிந்தான்.

"அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால்" (கம்ப. 205) என்றதனால், "எரியின் மைந்தன்" எனப்பட்டான் நீலன். அவன் வீசிய பச்சை மரம், அரக்கர்க்கு எரியும் நெருப்பாயிற்று என்பது ஒரு நயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The son of Fire took a marā tree that stood spreading wide,
  2. its roots sunk deep in the great earth,
  3. twisted it out root and all, and so that the demons' fierce army
  4. was crushed, hurled it like the fire at the end of the world.

What the poem says

Nīlaṉ, son of the fire god Akkiṉi, wrenches a huge, deep-rooted marā tree out of the ground and hurls it at the demons, crushing their army. There is a neat irony: the green tree thrown by the son of Fire falls on them like the fire that ends the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eriyiṉ maintaṉ iru nilam kīḻuṟa
viriya niṉṟa marāmaram vēroṭum
tiriya vāṅki nirutar veñ cēṉai pōy
neriya ūḻi neruppu eṉa vīciṉāṉ.