கம்பராமாயணம் 7120 · யுத்த 14.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அடுகளம் பாழ்பட - (அப்போது) போர்க்களம் பாழாகுமாறு; அரக்கர் சேனை வெருக்கொண்டு ஓடிட - அரக்கருடைய படைகள் அஞ்சி ஓடுமாறு; வெம்படைக்காவலர் - கொடிய வானரப் படைத்தலைவர்; நெருக்க - நெருக்கவே; கும்பானு நேர்ந்து - கும்பானு என்னும் அரக்க சேனைத்தலைவன் அங்கு வந்து; நெடும்சரம் துரக்க - மிகத் தூரம் செல்லும் அம்புகளை ஏவ; வானரச் சேனை துணிந்த - குரங்குப் படை துண்டுபட்டன.
இது முதல் ஆறு பாடல்கள் கும்பானுவும் இடும்பனும் போரிட்டு மாண்டது கூறும். நீலன் இட்ட மராமரத்துக்கு அஞ்சி, அரக்கர் சேனை ஓடுவதைத் தடுத்து, கும்பானு வானரச்சேனைகள் துண்டுபடுமாறு கணைகள் சொரிந்தான் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the demon army, its killing field laid waste,
- fled in terror, and the captains of the fierce army pressed on,
- Kumpāṉu came out to meet them and loosed
- his far-flying arrows, and the monkey army was cut to pieces.
What the poem says
The field is in ruins and the demons are running from Nīlaṉ's tree, with the monkey captains in pursuit. Then the demon commander Kumpāṉu steps in, stops the rout and cuts the monkey ranks to pieces with long-range arrows. The next six verses tell of his duel with Iṭumpaṉ and his death.