கம்பராமாயணம் 7126 · யுத்த 14.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தன் படைத்தலைவன் - (தன் கீழிலிருந்த) சேனைத்தலைவன்; தன் எதிர் பட - தனக்கு முன்பே உயிர்விட; துன்பு அடைத்த மனத்தன் - துன்பம் நிறைந்த மனத்தையடைந்தவனான; சுமாலிசேய் - சுமாலியின் மகனான பிரகத்தன்; முன் படைத்த முகில் அன்ன காட்சியன் - முன்னே வந்து நின்ற மேகம் போன்ற தோற்றம் உடையவனாய்; வன்பு அடைத்த வரிசிலை வாங்கினான் - வலிமை வாய்ந்த தன் கட்டமைந்த வில்லை வளைத்தான்.
“இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன்” என இப்படலத்து (7095) ப்பாடலில் வருதலால் சுமாலியின் சேய் பிரகத்தன் இவன் என்பது புலனாம். இவன் இராவணனால் கிழக்கு வாசலில் அணி வகுக்குமாறு கட்டளையிடப்பட்டவன். ஒற்றுக் கேள்விப் படலத்தில் சேனைகாவலனாக இவன் இராவணனோடு உரையாடியுள்ளமை காண்க. கரிய மேனியும் வில்லும் உடைய பிரகத்தன், வானர வில்லோடு தோன்றும் மேகத்துக்குச் சமம் ஆனான். முதல் // பாக்கள் பிரகத்தன் முடிவுகூறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When his own commander fell before his eyes,
- Cumāli's son, his heart filled with grief,
- looking like a cloud that has come up before one,
- took up his strong, banded bow.
What the poem says
With his commander Kumpāṉu killed in front of him, Pirakattaṉ, son of Cumāli, steps forward. He is the general whom Irāvaṇaṉ posted at the eastern gate and who spoke for the army in the council earlier.
Dark-bodied and holding his bow, he looks like a storm cloud with a rainbow across it. The verses that follow tell how he met his end.