கம்பராமாயணம் 7127 · யுத்த 14.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீங்கு தோளினன் - புயங்கள் பூரிக்கப் பெற்ற பிரகத்தன்; வார்சிலை வாங்கி - நீண்ட வில்லை வளைத்து; வானர மாப்படை ஏங்க - குரங்கினப் பெரும்படை வருந்துமாறு; நாண் எறிந்திட்டு - நாண் ஒலியெழுப்பி; தூங்குமாரி என - பொழிகின்ற மழை போல; சுடர்வாளிகள் - ஒளிமிக்க அம்புகளை; இடையீன்றி விட்டனன் ஆம் - இடைவிடாது எய்தனன் ஆம்.
போர் எனில் பூரிக்கும் தோளினன், ஆதலால் “வீங்கு தோளினன்” என்றார், பிரகத்தன் நாண் ஒலி கேட்டு, வானரப் படை வருந்திற்று என அவன் ஆற்றல் மிகுதி கூறியவாறு. தூங்குதல் - சொரிதல் “வீழ்பனி தூங்கத் துவண்டு” (திருக்கோவை. 320) என்பது காண்க. ஆம் - உரையசை அரோ - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bending the long bow, so that the great monkey army
- quailed as he twanged the string, without a pause,
- like pouring rain, the blazing arrows
- he of the swelling shoulders let fly, they say.
What the poem says
Pirakattaṉ draws his bow. The mere sound of the bowstring makes the monkey army flinch, and then his arrows come down in an unbroken downpour.
His shoulders are called “swelling” because a warrior's arms were said to swell with joy at the prospect of battle.