கம்பராமாயணம் 7130 · யுத்த 14.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மீட்டும் அங்கு ஓர் மராமரம் வேரொடும்
ஈட்டி வானத்து இடி என எற்றலும்
கோட்டு வில்லும் கொடியும் வயப்பரி
பூட்டு தேரும் பொடித்துகள் ஆயவே.
பொருள் · Meaning in Tamil
மீட்டும் - (நீலன்) மீண்டும்; அங்கு ஓர் மராமரம் - அங்கிருந்த மராமரம் ஒன்றை; வேரோடும் ஈட்டி - வேரோடும் பிடுங்கி; வானத்து இடியென எற்றலும் - விண்ணில் எழும் இடி போன்று (முழங்கி) (அம்மரத்தை) வீசியபோது; கோட்டும் வில்லும் - வளைத்த வில்லும்; கொடியும் - தேரின் கொடியும்; வயப்பரி பூட்டும் தேரும் - வலிய குதிரைகள் பூட்டிய தேரும்; துகள் பொடி ஆய - சிறு துகளாய் விட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Again, tearing up a marā tree that stood there, roots and all,
- he hurled it like a thunderbolt from the sky,
- and the bent bow, the banner, and the chariot
- yoked with mighty horses were ground to dust.
What the poem says
Nīlaṉ tries again. He uproots a great marā tree and throws it with a crash like thunder. This time it lands, and Pirakattaṉ's bow, banner, horses and chariot are all smashed to dust.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṭṭum aṅku ōr marāmaram vēroṭum
īṭṭi vāṉattu iṭi eṉa eṟṟalum
kōṭṭum villum koṭiyum vayap pari
pūṭṭum tērum poṭit tukaḷ āyavē.