கம்பராமாயணம் 7132 · யுத்த 14.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாய் மடித்து - வாயினை மடித்தவாறு; அழல்கண் தொறும்வந்து உக - நெருப்பு இருவிழிகளிலும் புறப்பட்டுச் சிந்த; போய் அடித்தலும் - போய் நீலனைத் தாக்கியபோது; நீலன் - நீலன் ஆனவன்; புகைந்து எதிர்தாய் - வெகுண்டு எதிரே தாவிச் சென்று; அடுத்து - நெருங்கிச் சென்று; அவன்தன் கையில் தண்டொடும் - அப்பிரகத்தனது கையில் உள்ள தண்டு என்னும் ஆயுதத்தோடும்; மீ எடுத்து - உயரத்தூக்க; விசும்புற வீசினான் - விண்ணில் பட வீசினான்.
வாய் மடித்தலும் கண் சிவத்தலும் வெகுளியின் மெய்ப்பாடுகள் கண்களில் நெருப்புச் சிந்த வாய் மடித்த வண்ணம் வந்து பிரகத்தனை அவன் தண்டோடு எடுத்து நீலன் விண்ணில் வீசினான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Biting his lip, with fire spilling from each of his eyes,
- he went and struck; and Nīlaṉ, fuming, leapt to meet him,
- closed with him, and, together with the mace in his hand,
- lifted him high and flung him to touch the sky.
What the poem says
Pirakattaṉ reaches Nīlaṉ and strikes, lips bitten and eyes flaming, the outward signs of fury. Nīlaṉ, just as angry, springs forward, grabs the demon mace and all, and hurls him up into the sky.