கம்பராமாயணம் 7138 · யுத்த 14.80

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் - தெற்குக் கோட்டை வாயிலில் போர்க்குச் சென்ற அரக்கர்கள்; மல்குலாவும் வயப்புயத்து அங்கதன் - வலிமை விளையாடும் ஆற்றல் மிக்க தோள்களையுடைய அங்கதன்; நிற்கவே - போரிட்டு நிற்கையில், பொன்குலாவு சுபாரிசன் - அழகு விளங்கும் சுபாரிசன் என்ற அணித்தலைவன்; பொன்ற - இறந்து விழுந்தவுடன்; எதிர் நின்றிலர் ஓடினர் - எதிரே நிற்க இயலாதவராய் ஓடினார்கள்.

நிசாசரர் - இரவில் சஞ்சரிப்பவர் அரக்கர். மல் - இங்கு வலிமையைக் குறித்தது. வலிமை எனும் ஆற்றல் விளையாடுகளம் அங்கதன் தோள்கள் என்று அழகுற மொழிந்தார். “அங்கதன் நிற்க அரக்கர் நின்றிலர்” என்றதில் உள்ள முரண் சுவையுணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The night-walkers who had gone to the southern gate,
  2. while Aṅkataṉ of the mighty arms where strength plays
  3. stood firm, did not stand against him but ran,
  4. as soon as Cupāricaṉ, bright with gold, was killed.

What the poem says

The story moves to the southern gate. There Aṅkataṉ, Vālī's son, whose shoulders are a playground for strength, holds his ground. Once their leader Cupāricaṉ is killed, the demons there run.

The verse plays on a contrast: Aṅkataṉ stands, and the demons cannot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teṟku vāyilil ceṉṟa nicācarar
mal kulāvu vayap puyattu aṅkataṉ
niṟkavē etir niṉṟilar ōṭiṉār
poṉ kulāvu cupāricaṉ poṉṟavē.