கம்பராமாயணம் 7139 · யுத்த 14.81

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திண்மேல் வாயிலில் - வலிமை மிக்க மேற்குக் (கோட்டை) வாயிலில்; நூற்றிரண்டு எனும் வெள்ளமும் - நூற்றிரண்டு வெள்ளம் அளவுடைய இராக்கதப் படை முழுவதும்; நோன் கழல் - வலிய வீரகண்டையணிந்த; ஆற்றல்சால் துன்முகனும் - வலிமை மிக்க துன்முகன் என்பவனும்; ஆர்த்து எழ - ஆர்ப்பரித்து எழ; மேவினர் - அங்கு வந்தவர்கள்; காற்றின் மாமகன் - வாயு மைந்தனாகிய அனுமானுடைய, கையெனும் காலனால் - கரம் என்னும் கூற்றுவனால்; வீடினர் - இறந்து பட்டனர்.

மேற்கு வாயிலில் நூற்றிரண்டு வெள்ளம் வானர சேனையுடன் நிற்குமாறு இந்திரசித்தினை இராவணன் பணித்தமையை, அணிவகுப்புப் படலத்தில் (6965) காண்க. அவன் கீழ் உள்ள படையில் ஓர் அணியின் தலைவன் துன்முகன். நூற்றிருபது வெள்ளமும் மடிந்தது என்பது பொருள் அன்று; நூற்றிருபது வெள்ளத்தில் துன்முகன் உட்பட, அனுமனை எதிர்த்தவர்கள் மடிந்தனர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The host of a hundred and two vellams, and, with strong anklets,
  2. mighty Tuṉmukaṉ, rose up there roaring;
  3. those who came to the strong western gate perished
  4. by the hand of the great son of the Wind, that was Death itself.

What the poem says

At the western gate, which Irāvaṇaṉ had put in his son Intiracittu's charge with a vast force, a division under Tuṉmukaṉ charges with a roar. Every one of them who meets Aṉumaṉ, son of the wind god, dies, for his hand is Death.

A vellam is an enormous military number. The verse does not mean the whole western army was wiped out, only those who faced Aṉumaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟṟu iraṇṭu eṉum veḷḷamum nōṉ kaḻal
āṟṟal cāl tuṉmukaṉum aṅku ārttu eḻa
mēl tiṇ vāyilil mēviṉar vīṭiṉār
kāṟṟiṉ mā makaṉ kai eṉum kālaṉāl.