கம்பராமாயணம் 7140 · யுத்த 14.82

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன காலையில் அந்த அந்த வாயிலில்
துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார்
‘மன்ன! கேள் ‘என வந்து வணங்கினார்
சென்னி தாழ்க்கச் செவியிடைச் செப்பினார்.

பொருள் · Meaning in Tamil

அன்னகாலை - அப்போது; அயிந்திர வாய்முதல் - இந்திர திசையாகிய கிழக்குத் திசை தொடங்கி (நான்கு வாயிலிலும்); துன்னுபோர் கண்ட - நெருங்கிய போரினை (நேரில்) பார்த்த; தூதுவர் ஓடினர் - தூதர்கள் விரைந்து ஓடிச் சென்று; வந்து - (இராமன் முன்பு) வந்து; வணங்கினர் - பணிந்தவராய்; சென்னி தாழ்க்க - இராவணன் தலை வளைத்துக் கேட்க; மன்ன கேள் என - எங்கள் மன்னவனே கேட்பாயாக என்று; செவி இடைச் செப்பினார் - இராவணன் காதுகளில் சொன்னார்கள்.

அயிந்திரன் - இந்திரன். அவன் காக்கும் திசை கிழக்கு. போர் நிலையினை அவ்வப்போது மன்னவர்கள் அறிந்து கொள்ளுமாறு படையமைந்திருந்தமையை இப்பாடலால் அறியலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that time the messengers who had watched the close fighting
  2. from Intiraṉ's gate onward ran off,
  3. came and bowed, saying “King, listen!”,
  4. and as he bent his heads, spoke into his ears.

What the poem says

Runners who have watched the fighting at all the gates, starting with the eastern gate, the direction ruled by Intiraṉ, rush back to Irāvaṇaṉ. He bends his heads to listen and they whisper the news.

The verse shows that the army had messengers whose job was to keep the king informed of how the battle was going.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa kālai, ayintira vāy mutal
tuṉṉu pōr kaṇṭa tūtuvar ōṭiṉār
‘maṉṉa! kēḷ ‘eṉa vantu vaṇaṅkiṉār
ceṉṉi tāḻkka, ceviyiṭaic ceppiṉār.