கம்பராமாயணம் 7142 · யுத்த 14.84

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ
தென்திசைப் பெரும் வாயிலில் சேர்ந்துழி
பொன்றினான் அச் சுபாரிசன்; போயினார்
இன்று போன இடம் அறியோம் ‘என்றார்.

பொருள் · Meaning in Tamil

வென்றி வேற்கை நிருதர் - வெற்றி பொருந்திய வேல்களைக் கரங்களில் ஏந்திய அரக்கர்கள்; வெகுண்டு எழ - சினந்து எழுந்து; தென் திசைப் பெருவாயிலில் சேர்ந்துழி - தெற்குக் (கோட்டை) வாசலை அடைந்த அளவில்; அச்சுபாரிசன் பொன்றினான் - அந்தச் சுபாரிசன் மடிந்தான்; போயினார் - அவனுடன் போனவர்கள்; இன்று போன இடம் - இன்று சென்ற இடம் (எதுவென்று); அறியோம் என்றார் - அறிய இயலவில்லை என்று வருந்தினார்கள்.

மகோதரனும் மாபெரும் பக்கனும் தெற்குவாசல் பொறுப்பாளர் என்று (6964) அணிவகுப்புப் படலப் பாடல் சுட்டும். தெற்கு வாயிலில் அங்கதனால் சுபாரிசன் கொல்லப்பட்டதை இப்படல 80 ஆம் பாடலில் கூறினார். இவ்வாயிலுக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் 16 கோடி என்பதனை, “தென்திசை வாயிலின் வைகும் தீயவர் என்றவர் எண்ணிரு கோடி என்பரால்” (6537) என்று முன்பு குறித்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “When the demons with victorious spears in hand rose in anger
  2. and reached the great gate on the southern side,
  3. that Cupāricaṉ perished; those who went with him,
  4. where they have gone today we do not know,” they said.

What the poem says

The second report concerns the southern gate. Cupāricaṉ has fallen there, killed by Aṅkataṉ, and the messengers cannot say where the troops who went with him have got to; in effect they have vanished.

The southern gate had been held by a huge force, said earlier to number sixteen crores.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘veṉṟi vēṟ kai nirutar vekuṇṭu eḻa
teṉ ticaip peru vāyilil cērntuḻi
poṉṟiṉāṉ ac cupāricaṉ; pōyiṉār
iṉṟu pōṉa iṭam aṟiyōm ‘eṉṟār.