கம்பராமாயணம் 7143 · யுத்த 14.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும் - வடக்கு வாயிலின் கண் வச்சிரமுட்டி என்னும் படைத்தலைவனும்; குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும் - மேற்கு வாயிலின் கண் துன்முகன் என்னும் மலை எனலாம் படைத்தலைவனும்; அடக்க அரும் வலத்து - பிறரால் வெல்ல முடியாத வலிமை உடைய; ஐம்பது வெள்ளமும் - ஐம்பது வெள்ளம் என்னும் எண் அளவான சேனையும்; பட - அழியும்படி; நம் படை சிதைந்தது - நமது சேனை கெட்டழிந்தது; என்றனர் - என்று சொன்னார்கள்.
மடிந்த சேனையின் அளவு ஐம்பது வெள்ளம் ஆகும் என்று கொள்க. ஏன் எனில் மேற்கு வாயிலில் மட்டும் நூற்று இரண்டு வெள்ளம் சேனை என்பதனை முன் (7097) கூறியுள்ளமையால் துன்முகக் குன்றம் - உருவகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “At the northern gate Vacciramuṭṭi,
- at the western gate Tuṉmukaṉ, that mountain,
- and fifty vellams of irresistible strength
- have fallen, and our army is shattered,” they said.
What the poem says
The messengers finish their report: at the northern gate the commander Vacciramuṭṭi is dead, at the western gate Tuṉmukaṉ, a mountain of a man, is dead, and fifty vellams of soldiers have been destroyed.
The fifty vellams are the troops actually lost, not the whole force; the western gate alone had a hundred and two.