கம்பராமாயணம் 7144 · யுத்த 14.86

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்ற வார்த்தை எரி உகும் நெய் எனச்
சென்று சிந்தை புகுதலும் சீற்றத் தீ
கன்று கண்ணின் வழிச் சுடர் கான்றிட
நின்று நின்று நெடிது உயிர்த்தான் அரோ.

பொருள் · Meaning in Tamil

என்ற வார்த்தை - என்று ஒற்றர் கூறிய வார்த்தைகள்; எரிபுகு நெய் என - தீயில் ஊற்றிய நெய் போல; சிந்தை சென்று புகுதலும் - மனத்துட் சென்று சேர்ந்தவுடனேயே; சீற்றத் தீ - சினம் என்னும் தீயானது; கன்று - வெதும்பிய; கண்ணின் வழி - கண்ணின் வழியாக; சுடர்கான்றிட - பொறிகளைச் சிந்த; நின்று நின்று நெடிது உயிர்த்தான் - விட்டு விட்டுப் பெருமூச்செறிந்தான்.

வெகுளிச் சுவையின் மெய்ப்பொருளை இப்பாடலால் அறிக. வானரங்களின் வெற்றிச் செய்தி நெருப்பில் ஊற்றிய நெய். அந்த நெருப்பு கண் வழியாகப் பொறிப் பொறியாய்ச் சிந்தியது என அழகுபட உருவகித்தார் “பெருஞ்சினம் புனற்படு நெருப்பில் பொம்மெனச் சிதற” (பெருங். 1. 47-129) என்பார் கொங்குவேளிரும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As those words entered his mind
  2. like ghee poured into a fire, the fire of his rage
  3. seethed and spat sparks out through his eyes,
  4. and again and again he heaved long sighs.

What the poem says

Irāvaṇaṉ hears the report. The news of the monkeys' victories goes into his mind like ghee poured on a fire, and his anger flares so high that sparks fly from his eyes. He stands there breathing in long, heavy gasps.

The verse is a study of anger, with every outward sign of it drawn as fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟa vārttai eri puku ney eṉac
ceṉṟu cintai pukutalum cīṟṟat tī
kaṉṟu kaṇṇiṉvaḻic cuṭar kāṉṟiṭa
niṉṟu niṉṟu neṭitu uyirttāṉarō.