கம்பராமாயணம் 7146 · யுத்த 14.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உற்ற போதின் - (நீலன், பிரகத்தனோடு) போரிட வந்த போதில்; இருவரும் - அவ்விரு வீரர்களும்; ஒன்றல - ஒரு வகையல்ல; கற்ற போர்கள் எலாம் செய்த காலையில் - (தாங்கள்) பயின்றிருந்த போர் வகைகள் எல்லாம் புரிந்து போரிடும் வேளையில்; அந்நீலன் - அந்த நீலன் என்பவன்; நெற்றி மேல் - பிரகத்தனுடைய நெற்றியின் மீது; நெடுங்கையால் எற்ற - நீண்ட கையினால் தாக்க; வீந்தனன் - மாண்டு வீழ்ந்தனன் (பிரகத்தன்); என்ன இயம்பினார் - என்று விடையிறுத்தனர் (தூதுவர்).
போர்க்கல்வியைக் கற்ற தீரர்கள் இருவரும் என்பது தோன்ற, “கற்ற போர்கள்” என்றும், அவை பல திறத்தனவாய், கிளை விரித்தனவாய் இருந்தன என்பது தோன்ற, “கற்ற போர்கள் எலாம்” என்றும் உரைத்தார் கற்ற போர் விற்போர் மற்போர், யானை ஏற்றம், குதிரை ஏற்றம், தேர் செலுத்துதல் முதலியனவாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “When they met, the two of them fought
- every kind of battle they had learned, not one alone,
- and then that Nīlaṉ, with his long arm, struck him
- on the forehead, and he perished,” they said.
What the poem says
The messengers finish: the two champions used every form of combat they had trained in, archery, wrestling and the rest, until Nīlaṉ struck Pirakattaṉ on the forehead with his long arm and killed him.
“Every kind of battle they had learned” stresses that both were trained, skilled fighters.