கம்பராமாயணம் 7147 · யுத்த 14.89

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய - தலைவனே! அன்னவன்னொடும் போன அரக்கரில் - அப்பிரகத்தனோடு போருக்குப் போன அரக்க வீரர்களில்; நல் நகர்க்கு வந்தோம் நாங்களே - (நம்) அழகிய இலங்கை மாநகர்க்கு (மீண்டு) வந்தவர்கள் நாங்கள் மட்டுமே; என்ன என்ன - என்று தூதுவர் கூறக்கூற; இகல் வாய்களை எயிற்று - (இராவணன்) தனது வினவிய வாய்கள் பத்தினையும் பற்களினால்; தின்னத் தின்ன - பன்முறை கடித்துக் கொண்ட போது; திக்கு எலாம் எரிந்தன - திசைகள் யாவும் தீப்பற்றி எரிந்தன.

மற்றவர்கள் போரில் இறந்தார்கள் என்று உரைக்கும் துணிவின்றி, அப்பொருள் தானாகத் தோன்றுமாறு, “நகர்க்கு வந்தோம் நாங்களே” எனக் கூறிய சாதுரியம் பாராட்டற்குரியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Of the demons who went with him,
  2. we alone have come back to the fair city, lord!”
  3. As they said this and said it, he bit and bit his angry mouths
  4. with his fangs, and all the quarters blazed.

What the poem says

The messengers end by saying that of all who marched out with Pirakattaṉ, they alone have come back to Ilaṅkai. They lack the nerve to say outright that everyone else is dead, and phrase it so that the meaning makes itself clear.

With every word, Irāvaṇaṉ bites down on the lips of his ten mouths, and his rage seems to set the horizons on fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavaṉṉoṭum pōṉa arakkaril
nal nakarkku vantōm aiya! nāṅkaḷē
eṉṉa eṉṉa eyiṟṟu ikal vāykaḷait
tiṉṉat tiṉṉa erintaṉa tikku elām.