கம்பராமாயணம் 7148 · யுத்த 14.90

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாடு நின்ற நிருதரை - அருகில் நின்ற அரக்கர்களை; வன்கணான் - கொடுமை நிறைந்த கண்களால் இராவணன்; ஓட நோக்கி - (அஞ்சி அவர்) ஓடுமாறு உறுத்துப் பார்த்துவிட்டு; உயர் படையான் - சிறந்த ஆயுதங்களையுடைய பிரகத்தன்; அக்கோடு கொண்டு - அந்த மரக்குச்சிகளைக் கொண்டு; பொருத குரங்கினால் வீடினான் - போரிட்ட குரங்கால் மாண்டான்; என்று மீட்டும் விளம்பினான் - என்று திரும்பவும் கூறிக்கொண்டான்.

ஒப்புயர்வற்ற ஆயுதங்களை ஏந்திய பிரகத்தன், வெறுங் கிளைகளை ஏந்திய குரங்குக்கா தோற்றான் எனும் இராவணனின் நெஞ்சப் பொருமல் வெளிப்பட, “உயர் படையான் மற்று அக்கோடு கொண்டு பொருத குரங்கினால் வீடினான்?” என்றார். மற்று - வினைமாற்றுப் பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The cruel-eyed one glared at the demons standing near
  2. so that they ran, and said once more:
  3. “He of the finest weapons, by a monkey
  4. that fought with that bough, has perished!”

What the poem says

Irāvaṇaṉ glares at the demons around him until they flee in fear, and keeps repeating the thing he cannot accept: Pirakattaṉ, armed with the best weapons there are, has been killed by a monkey fighting with nothing but a tree branch.

The repetition shows his wounded pride boiling over.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṭu niṉṟa nirutarai vaṉkaṇāṉ
ōṭa nōkki ‘uyar paṭaiyāṉ maṟṟu ak
kōṭu koṇṭu poruta kuraṅkiṉāl
vīṭiṉāṉ! ‘eṉṟu mīṭṭum viḷampiṉāṉ.